பாகிஸ்தானில் இந்திய விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இந்திய விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி  சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இந்திய விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் இந்திய விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி  சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 24, 1999 ஆம் ஆண்டு காத்மாண்டுவிலிருந்து தில்லி வந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் ஐசி-814 விமானம் 5 பயங்கரவாதிளால் கடத்தப்பட்டது.

179 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் கொண்ட விமானத்தை கடத்தியவர்கள் அம்ரிஸ்தர், லாகூர், துபாய்  வழியாகப் பயணித்து இறுதியாக தலிபான்கள் வசமிருந்த ஆப்கானிஸ்தானின் கந்தஹர் பகுதியில் தரையிறக்கினர். 

இந்திய சிறையிலிருந்த பயங்கரவாதிகள் சிலரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட இந்தக் கடத்தலில் 25 வயதான பயணி ஒருவரை பயங்கரவாதிகள் குத்திக் கொன்றனர்.

இந்நிலையில், கொலையில் தொடர்புடைய தீவிரவாதியான  ஜெய்ஷா-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த மிஸ்திரி சாகூர் இப்ராகிமை அடையாளம் தெரியாத நபர் கராச்சியில் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் அரசுத் தெரிவித்துள்ளது.

மேலும், பலியான தீவிரவாதி மிஸ்திரி சாகூர் இப்ராகிம் பல ஆண்டுகளாக தன் அடையாளத்தை மறைத்து சாகித் அக்குந்த் என்கிற பெயரில் வாழ்ந்து வந்ததாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com