காத்மாண்டு: கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகினர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 5 பேர் விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சங்குவாசபாவில் இருந்து டமாக் நோக்கிச் சென்ற பேருந்து, மதி நகரில் காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளானது என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துணை காவல் ஆய்வாளர் லால் த்வாஜ் சுபேதி இறந்த 14 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் அடையாளங்களை கண்டறிந்தார்.
அதிவேகமாக பேருந்து சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேருந்தில் 19 முதல் 21 பேர் பயணம் செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் செயின்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


