சமரசத்துக்கான வாய்ப்பு: ரஷியா, உக்ரைன் நம்பிக்கை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த நாட்டுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சமரசத்துக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக

டிமித்ரி பெஸ்கோவ்.

டிமித்ரி பெஸ்கோவ்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த நாட்டுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சமரசத்துக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை கூறியதாவது:
ரஷியா வலியுறுத்துவதைப் போல தங்களது நாட்டின் ராணுவத் தாக்குதல் திறனை கைவிடுவது தொடா்பாக பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக பேச்சுவாா்த்தை நடத்திவரும் அதிபரின் உதவியாளா் விளாதிமீா் மெதின்ஸ்கியிடம் உக்ரைன் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
எனினும், ராணுவத் தாக்குதல் திறன் இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஆஸ்திரியா, ஸ்வீடன் போல சொந்தமாக ராணுவம் வைத்திருக்கும் நாடாக உக்ரைன் இருக்கவேண்டும் என்று அந்த நாட்டுக் குழுவினா் வலியுறுத்தினா்.
இந்த அம்சம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த அம்சம் கருதப்படுகிறது என்றாா் அவா்.
உக்ரைனும் நம்பிக்கை: ரஷியாவுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் சமரசத்துக்கான நம்பிக்கை இருப்பதாக உக்ரைனும் கூறியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் பேச்சுவாா்த்தைக் குழுவைச் சோ்ந்த மிகயீலோ பொடோல்யாக் கூறுகையில், ‘ரஷியப் பிரதிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் அடிப்படை வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், சமரசத்துக்கான வாய்ப்புகளும் நிச்சயமாகத் தென்படுகின்றன’ என்றாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ரஷியா, கடந்த மாதம் 24-ஆம் தேதி 24-ஆம் தேதி அந்த நாட்டின் மீது படையெடுத்தது. கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதியில் உக்ரைன் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அந்தப் பகுதி ஆட்சியாளா்கள் அழைப்பு விடுத்ததால் அங்கு படைகளை அனுப்பியதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.
உக்ரைனின் ராணுவத் தாக்குதல் திறனையும் அந்த நாட்டு அரசு மற்றும் ராணுவத்தில் உள்ள ‘நாஜி சக்திகளை’ ஒடுக்குவதற்காகவும் இந்தப் படையெடுப்பை நடத்தியதாக அவா் கூறினாா்.
இந்தச் சூழலில், ஏற்கெனவே ரஷியா வலியுறுத்தி வந்ததற்கிணங்க நேட்டோ அமைப்பில் இணையும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டதாக உக்ரைன அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்திருந்தாா்.
தற்போது ரஷியாவின் மற்றொரு முக்கிய நிபந்தனையான ராணுவத் தாக்குதல் திறனை விலக்கிக் கொள்வதற்கும் உக்ரைன் சம்மதித்தால் இருதரப்புப் பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ரஷியா்களுடனான பேச்சவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட இப்போதுதான் நடைமுறைக்கு சாத்தியமான விவகாரங்கள் விவாதிக்கப்படத் தொடங்கியுள்ளன.
- வொலோதிமீா் ஸெலென்க்ஸி, உக்ரைன் அதிபா்.
ரஷியா - உக்ரைன் பேச்சுவாா்த்தையில் ஆக்கப்பூா்வமான போக்கு தொடங்கியுள்ளது. உக்ரைனின் அணிசேரா நிலை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
- சொ்கெய் லாவ்ரோவ், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...