தாயிடமிருந்து குழந்தைக்கு கரோனா தொற்று பரவுவது அரிது: ஆய்வு
கரோனா நோயை உண்டாக்கும் SARS-CoV-2 வைரஸ் பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்திற்கு பின்பும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகிறது. ஆனால்..


கரோனா நோயை உண்டாக்கும் SARS-CoV-2 வைரஸ் பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்திற்கு பின்பும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகிறது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாகவே ஏற்படுகின்றன என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்குத் தொற்று பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, தாய்மார்களுக்குத் தொற்று இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகளுக்குத் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு குறைவு என்பதைக் கண்டறிந்துள்ளது.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த 14,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்பான உலகெங்கிலும் உள்ள தரவுகளை ஆய்வு செய்தது.
ஒட்டுமொத்தமாக, கரோனா தொற்றுள்ள தாய்மார்களுக்குப் பிறந்த 14,271 குழந்தைகளில் 1.8 சதவீதம் பேர் பிசிஆர் சோதனைகளைப் பயன்படுத்தி வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வயிற்றில் இருக்கும் போதும், பிரசவத்தின் போதும் மற்றும் பிரசவத்திற்குப் பிறகும் தாயிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் பரவுவது சாத்தியம் என்பதைக் காட்ட உலக சுகாதார அமைப்பின் கடுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தும் முதல் ஆய்வு எங்களுடையது என்று பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஷகிலா தங்க ரத்தினம் கூறினார்.
தொற்றுள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில் மிகச் சிறிய விகிதமே குழந்தைகளுக்குப் பரவுகிறது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாகவே ஏற்படுகின்றன என்பதை உறுதியளிக்க முடியும்.
தாய்மார்களுக்குத் தொற்று மற்றும் கடுமையான நோயைத் தடுக்க கர்ப்ப காலத்தில் தடுப்பூசி மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...