ஆப்கனில் திறக்கப்பட்ட 1 மணி நேரத்தில் பள்ளிகளை மூடிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உயர்நிலை பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
1 மணி நேரத்தில் பள்ளிகளை மூடிய தலிபான்கள்
1 மணி நேரத்தில் பள்ளிகளை மூடிய தலிபான்கள்


காபூல்: ஆப்கானிஸ்தானில் உயர்நிலை பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டத்தின்படி, மகளிர் கல்விக்கான திட்டங்களை வரையறுத்த பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அது வரை உயர்நிலை பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளிகளுக்கு மாணவிகள் வருவதற்கு தலிபான் அரசு தடை விதித்திருந்த நிலையில், மார்ச் 23ஆம் தேதிமுதல் பெண்கள் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் நாட்டு கல்வித் துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், மாணவிகள் உள்பட அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த நிலையில், கல்வித் துறை சார்பில், ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாசாரத்தின் அடிப்படையில் பெண்களுக்கான கல்வி குறித்து வரையறை செய்ய பிறகு பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆறாம் வகுப்பு முதல்  அனைத்து பெண்கள் பள்ளிகளும், பெண்களும் பயிலும் பள்ளிகளில் அவர்களுக்கான வகுப்புகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com