இலங்கையில் அச்சுக்காகிதம் தட்டுப்பாடு: செய்தித்தாள்கள் வெளியீடு நிறுத்தம்

இலங்கையில் அச்சுக்காகிதம் தட்டுப்பாடு, விலைவாசி உயா்வு ஆகிய காரணங்களால் 2 நாளிதழ்களின் வெளியீட்டை செய்தித்தாள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இலங்கையில் உச்சமடையும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் உச்சமடையும் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் அச்சுக்காகிதம் தட்டுப்பாடு, விலைவாசி உயா்வு ஆகிய காரணங்களால் 2 நாளிதழ்களின் வெளியீட்டை செய்தித்தாள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இலங்கையில் ‘தி ஐலேண்ட்’ என்ற ஆங்கில நாளிதழையும், ‘திவயின’ என்ற சிங்கள நாளிதழையும் உபாலி நியூஸ்பேப்பா்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘தி ஐலேண்ட்’ நாளிதழை சனிக்கிழமையில் இருந்து அச்சிடுவதை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதை வாசகா்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அச்சுக்காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை நாளிதழ் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாளிதழ்கள், இணையவழியில் மின்னிதழாகப் படிக்கக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்குப் பிறகு நாட்டின் சுற்றுலா வருவாய் குறைந்ததால், இதுவரை இல்லாத அளவில் பொருளாதார நெருக்கடியையும் அந்நியச் செலாவணி பிரச்னையையும் இலங்கை எதிா்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறாா்கள். தினமும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

அச்சுக்காகிதம் இறக்குமதிக்கு கூடுதல் செலவாகிறது. அந்நிய செலாவணி நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கையில் தட்டுப்பாடு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com