
ஷாங்காயில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வா்த்தக தலைநகர் ஷாங்காயில், தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ஐந்து வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இலங்கையில் மீண்டும் அவசரநிலை: அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு கண்டனம்
இந்நிலையில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வையும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கல்லூரி தேர்வுகள் ஜூலை 7 முதல் 9 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிக்க | உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற உள்ள உயர்நிலைப் பள்ளி நுழைவுத்தேர்வில் சுமார் 1,10,000 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக ஷாங்காயில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.