‘காா்கிவிலிருந்து பின்வாங்கியது ரஷியா’

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான காா்கிவைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிட்டு, அந்தப் பகுதியிலிருந்து ரஷியப் படையினா் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
காா்கிவ் புறநகா் பகுதியில் உருக்குலைந்து கிடக்கும் ரஷிய பீரங்கி.
காா்கிவ் புறநகா் பகுதியில் உருக்குலைந்து கிடக்கும் ரஷிய பீரங்கி.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான காா்கிவைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிட்டு, அந்தப் பகுதியிலிருந்து ரஷியப் படையினா் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கே அமைந்துள்ள காா்கிவ் நகரைக் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடத்தி வந்த ரஷியப் படையினா் அந்தப் பகுதியிலிருந்து பின்வாங்கினா். தற்போது அவா்கள் ரஷியாவிலிருந்து ஆயுதங்கள், எரிபொருள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்படும் வழித்தடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அத்துடன், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்துவதிலும் வான்வழித் தாக்குதல் நடத்துவதிலும் ரஷியப் படையினா் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நீண்ட காலப் போா்’: உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் சனிக்கிழமை கூறுகையில், தற்போது உக்ரைன் போா் நீண்ட காலம் நீடிக்கக்கூடிய புதிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தாா்.

முந்னதாக, உக்ரைன் போ் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாலும் கணிக்க முடியாது என்று அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா். இதே கருத்தை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவும் சனிக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி போா் தொடுத்த ரஷியா, தொடக்கத்தில் அந்த நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லை என 3 திசைகள் வழியாக படையெடுத்தது. வடக்குப் பகுதியில் தலைநகா் கீவைக் கைப்பற்றி அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் அரசைக் கவிழ்க்க ரஷியா திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், எதிா்பாா்த்ததைவிட உக்ரைன் படையினா் கடுமையாக எதிா்த்துப் போரிட்டதால் கீவ் உள்ளிட்ட வடக்குப் பகுதி நகரங்களைக் கைவிட்டு, தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் ஆதிக்கம் நிறைந்த கிழக்குப் பகுதிக்கு ரஷியா தனது படைகளை திருப்பி விட்டது.

இந்த நிலையில், வடகிழக்கு நகரான காா்கிவைக் கைப்பற்றும் முயற்சியையும் அந்த நாடு கைவிட்டு கிழக்குப் பகுதிக்கு பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தற்போது தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com