

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச இன்று பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால், நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் குவிந்ததால், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு பாதுகாப்புடன் மகிந்த ராஜபட்ச அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
திரிகோணமலையிலிருந்து மகிந்த ராஜபட்ச நேற்று வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், நாட்டைவிட்டு தப்பிச் சென்றதாகவும், கொழும்புவில் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும் கருத்துகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் மகிந்த ராஜபட்ச பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், அவரை கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றம் வரவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.