பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
பேரறிவாளன் (கோப்புப் படம்)
பேரறிவாளன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பை வாசித்தனர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:

முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறு. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப விருப்பமில்லை.

161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.

30 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.