பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது எப்படி?

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது எப்படி?
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது எப்படி?


புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | பேரறிவாளன் சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனும் கனவு பலித்தது: அற்புதம்மாள்

இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை எந்த அடிப்படையில் விடுதலை செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, மாநில அமைச்சரவை முழுமையாக விசாரித்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது. 

ஆனால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு. மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநர் முடிவுக்கே அனுப்ப நாங்கள் விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மேலும், அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க 142 சட்டப்பிரிவு வழி வகுகிறது என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com