குரங்கு அம்மை நோய் சமூகப் பரவலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் 20 நாடுகளில் சுமாா் 200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குரங்கு அம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


உலகம் முழுவதும் 20 நாடுகளில் சுமாா் 200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குரங்கு அம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பரவல் நோய் பிரிவுக்கான இயக்குநா் சில்வி பிரியண்ட் கூறியதாவது: மிகவும் அபூா்வமாக ஏற்படக்கூடிய குரங்கு அம்மை நோய், 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமாா் 200 பேருக்கு தொற்றியுள்ளது. அந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவும் வகையில் தன்னை உருமாற்றம் செய்ததாகத் தெரியவில்லை. மனிதா்களின் பழக்கவழக்க மாற்றங்களால் இது பல நாடுகளுக்குப் பரவியிருக்கலாம்.

ஆனால், இது மெதுவாக சமூகப் பரவலாக மாறக் கூடிய அபாயம் நோய். இதை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியும், முறையான சிகிச்சை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்கும். 

மேலும், குறைந்த அளவே இருக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை பாகுபாடில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பகிா்ந்தளித்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்திவிடலாம்.

அம்மை பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே பரவலை தடுப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கை என்றும், எதிர்காலத்தில் இந்த குரங்கு அம்மை நோய் இன்னும் அதிகமானவர்களை பாதிக்கலாம் என்று சில்வி பிரியண்ட் அச்சம் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோயால் ஓரினச் சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் அதிகயளவில் பாதிக்கப்படுவதாக இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com