
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் வைத்திருக்கும் ஃப்ளூ டிக் கணக்குகளுக்கு இனி மாதம் 8 டாலர்(ரூ.640) வசூலிக்கப்படும் என தன் டிவிட்டர் பக்கத்தில் எலான் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா, “நான் ட்விட்டர் ப்ளூ டிக் கேட்கவில்லையே. இது திடீரென ஒருநாள் எனது பக்கத்தில் தோன்றியது. இதை அகற்றினாலும் எனக்கு பிரச்னையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஐநா காலநிலை மாநாடு: ரிஷி சுனக் கலந்து கொள்வார் என அறிவிப்பு
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த வாரம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.