வழக்கமாக உணவகங்களுக்குச் சென்றால் என்ன செய்வோம்? உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். குறிப்பாக, வீட்டில் சமைக்கவில்லை என்றால்தான் ஹோட்டலுக்குச் செல்வோம்
ஆனால், ஜப்பானில் ஒரு வினோத ஹோட்டல் உள்ளது. இங்கு நீங்களே சமைத்து சாப்பிடலாம். இதற்காக தேவைப்படும் சமையல் பொருள்களையும் நீங்களே தேர்வு செய்யலாம்.
இங்கு மீன் சமைக்க விரும்பினால் அங்குள்ள குளத்தில் நீங்களே மீன் பிடித்து சமைக்கலாம் அல்லது உங்களுங்குப் பிடித்தவாறு வழிமுறைகளை கூறி சமையல்காரர் கொண்டு சமைக்கலாம்.
மேலும், இதுபோன்று சைவம், அசைவம் என பல உணவுகளைத் தயார் செய்வதற்கான காய்கறிகள், மசாலா பொருள்கள் என சமையலுக்குத் தேவையான மூலப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எது தேவையோ எடுத்து சமைக்கலாம் அல்லது பொருள்களை எடுத்துக்கொடுத்து சமையல்காரரை சமைக்கச் சொல்லலாம். ஆர்டர் செய்தும் சாப்பிடலாம்.
இத்துடன் நீங்கள் மீன் பிடித்ததையோ அல்லது சமைத்ததையோ இந்த ஹோட்டல் கொண்டாடவும் செய்கிறது. இது வித்தியாசமான புதுமையான அனுபவமாக உள்ளதாக இந்த ஹோட்டலுக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் உணவகத்தின் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | உடலில் கெட்ட கொழுப்பைக் கரைக்க... என்னென்ன சாப்பிடலாம்?