ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளர்கள்: பிரசாரம் செய்ய அழைப்பு!

அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி. கந்தசாமி ஆகியோர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது குறித்து...

News image

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் சூலூர் தொகுதி அதிமுக வி.பி. கந்தசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை. - டிஎன்எஸ்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:39 pm IST

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி. கந்தசாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அண்ணாமலையின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி. கந்தசாமி ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். பேரவைத் தேர்தலில் தங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் கேட்டுக்கொண்டனர்.

மேலும், கவுண்டம்பாளையம், சூலூர் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.

அப்போது, அண்ணாமலை அண்ணா என்னுடைய ஓட்டை உங்களுக்கு செலுத்தி விட்டு. பிஎல்ஏ ஏஜென்டா நானே உங்களுக்கு வேலை செய்கிறேன் என்று பி.ஆர்.ஜி.அருண்குமாரிடம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Summary

ADMK Candidates Meet Annamalai to Seek Support: Invitation Extended to Campaign!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.