விஜய்க்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அண்ணாமலை
முதல்வர் விஜய்க்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என அண்ணாமலை பேசியது குறித்து...
மாநாட்டில் பேசிய அண்ணாமலை - யூடியூப்
விஜய்க்கு எதிராக திமுக பிரச்னை கொடுத்தபோது முதல் ஆளாக கேள்வி எழுப்பியதாக வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது, "அடுத்தாண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிடும். அதற்குள்ளாக 8 லட்சம் பேரை நாம் தயார்ப்படுத்தியாக வேண்டும்.
எனக்கும் விஜய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரை நேரில் பார்த்தது கிடையாது. அவரும் என்னை பார்த்தது கிடையாது.
ஆனால், தேர்தலுக்கு முன்பு தவெகவுக்கு அப்போதைய திமுக அரசு பிரச்னை கொடுத்தபோது எதிர்த்து கேள்வி கேட்டது நான் மட்டுமே. சரியோ தவறோ நியாயமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தவெக அரசு சில விஷயங்களை சரியாகச் செய்தால், சரி என்று சொல்வேன். தவறு என்றால் தவறு என்று சொல்வேன். இந்த அடிப்படைப் புரிதல் நம்முடைய இயக்கத்தின் 21 லட்சம் உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் எல்லா விதமான கருத்தும் இருக்கும். எல்லா விதமான கொள்கைகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். திமுக, அதிமுக, நாதக என திராவிட கட்சிகள், தனி தேசியம் பேசும் கட்சிகளின் மாறுபட்ட கொள்கைகளில் இருந்தும் வருகின்றனர். எல்லோருடைய கருத்துகளையும் நாம் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
We The Leaders Annamalai has said that he has no connection with CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

