மாற்றத்தைப் பேசுவது எளிது; நடத்திக் காட்டுவது கடினம்: அண்ணாமலை
மாற்றத்தை நடத்திக் காட்டுவது கடினம் என அண்ணாமலை பேசியது குறித்து...
மாநாட்டில் பேசிய அண்ணாமலை - யூடியூப்
மாற்றம் குறித்து பேசுவது எளிது என்றும் நடத்திக் காட்டுவது கடினம் என்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு நடத்திய பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது, "நான் நிறைய பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறேன். அவர்களுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போன்றோர் மீதான ஈர்ப்பு அல்லது இந்த அரசியல் கட்சிகளெல்லாம் பயனற்றவை என்றும், புதிதாக ஒரு கட்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் நன்றாக யோசித்துச் செயல்படுங்கள். மாற்றம் என்று பேசுவது எளிது. ஆனால், மாற்றத்தை நடத்திக் காட்டுவது கடினம்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி - அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து யாரேனும் நிதியுதவி அளிப்பதாகத் தெரிய வந்தால், அவர்களை உடனடியாக கைது செய்யுங்கள். அதனை விடுத்து சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். வெளிநாட்டின் கைக் கூலியாக யாரேனும் இந்தியாவில் செயல்பட்டால், அவர்களை கைது செய்யுங்கள். எதையும் செய்து, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு, மத்திய அரசுக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இபிஎஸ் மீது அவதூறு! அதிமுகவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர முடியாது: மன்னிப்புகோர நிர்மல் குமார் மறுப்பு
Summary
Talking about change is easy; implementing it is difficult, says We The Leaders Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

