திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

அண்ணாமலை.

Published On :

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘இது நம்ம இயக்கம் - வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த போது, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆத்திகர்களை நாத்திகர்கள் அவமதிப்பது தொடர்ந்தால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர், 1956 ஆம் ஆண்டு பேசியதாகக்” குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலைக்கு எதிராக சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது, சநாதனத்துக்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், 1956 ஆம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் பேசியதை அண்ணாமலை சுட்டிக்காட்டி பேட்டி அளித்திருந்தார்.

தனிநபர் புகார் மீது எந்த ஒரு ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது தவறு என்று அண்ணாமலை தரப்பில் வாதிடப்பட்டது.

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சரிதான் என்றும், அண்ணாமலை தொடர்ந்து இதுபோன்று பேச்சுகளை பேசி வருவதால் அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் பியூஸ் மனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அண்ணாமலை மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அண்ணாமலைக்கு எதிராக பியூஸ் மனுஷ் தாக்கல் செய்த தனி நபர் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Summary

The Madras High Court has ordered the quashing of the case against former Tamil Nadu BJP President Annamalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER