
மாறுவோம், மாற்றுவோம்! அண்ணாமலையின் புதிய அறிவிப்பு!
’வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பற்றி...

அண்ணாமலை (கோப்புப்படம்) - படம் - எக்ஸ்
’வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை, அவருடைய இயக்கத்தின் இணையதளம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சனிக்கிழமை (அக. 22) வெளியிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வீ த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.
முதலில் இயக்கமாகத் தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
இந்த இயக்கத்தில் சேருவதற்கான பிரத்யேக இணையதளத்தையும் அவர் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து, முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தற்போது வரை 19.57 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்கத்தின் இணையதளம் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எங்களுடைய இணையதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து, பயன் பெறுங்கள். மாறுவோம், மாற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
’வீ த லீடர்ஸ்’ இயக்கம் மூலம் சமூக சேவைகளை செய்து வரும் அண்ணாமலை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் தனது முதல் மாநாட்டை நடைத்தியது குறிப்பிடத்தக்கது.
Happy to inform you all that our website, https://t.co/65NCGwkOH9, has been upgraded, with new features.
— K.Annamalai (@annamalai_k) August 22, 2026
Do explore the new features, stay connected, and make the most of it.
மாறà¯à®µà¯à®®à¯, மாறà¯à®±à¯à®µà¯à®®à¯!
Summary
Annamalai, the leader of the 'We the Leaders' organization, issued a new announcement regarding his organization's website on Saturday (Oct. 22).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







