பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

முதல் மாநாடு... மேடையில் விழுந்து வணங்கிய அண்ணாமலை!

வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, மேடையில் விழுந்து மக்களை வணங்கியது குறித்து...

News image

மேடையில் விழுந்து வணங்கிய அண்ணாமலை - எக்ஸ்

Updated On :12 ஜூலை 2026, 6:19 pm IST

பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, மேடையில் விழுந்து வணங்கினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டை தொடக்கி வைக்கும் விதமாக மேடையில் அண்ணாமலை குத்துவிளக்கு ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினர்.

முன்னதாக மேடைக்கு வந்த அண்ணாமலை, செருப்பைக் கழற்றிவிட்டு மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து மக்களை வணங்கினார்.

வீ தி லீடர்ஸ் அமைப்பைத் தொடங்கி நடக்கும் முதல் மாநாடு என்பதாலும், பாஜகவில் இருந்து விலகிய பிறகு நடத்தும் முதல் மாநாடு என்பதாலும் இதனை புதிய தொடக்கமாக நினைத்து மேடையில் விழுந்து அண்ணாமலை வணங்கியுள்ளார்.

இந்த அமைப்பில் இதுவரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Summary

Pollachi We The Leaders K Annamalai prostrated on the stage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.