கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி வி தி லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதில், இதுவரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்த அமைப்பு சார்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ‘போதையில்லாத தமிழகம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு இது என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Inauguration of the first conference of the Annamalai we the leaders organization
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











