தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

திருச்செந்தூரில் அண்ணாமலையின் 2வது மாநில மாநாடு!

திருச்செந்தூரில் அண்ணாமலையின் 2வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறித்து...

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 1:03 pm IST

திருச்செந்தூரில் இது நம்ம இயக்கம் (WE THE LEADERS) அமைப்பின் 2வது மாநில மாநாடு வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை அந்தக் கட்சியிலிருந்து விலகி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘வி த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

இந்த இயக்கத்துக்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலையின் இது நம்ம இயக்கத்தில் பலர் சேர்ந்து வருகின்றனர்.

18 மாதங்கள் வரை தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக ஏற்கெனவே அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

முதலில் அமைப்பாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், வி த லீடர்ஸ் என்ற இயக்கத்தின் 2வது மாநில மாநாடு திருச்செந்தூரில் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Summary

Annamalai's second state conference is set to be held in Tiruchendur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.