நமது சிறப்பு நிருபர்
"முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிவிட்டதால் அவரது அரசியல் செயல்பாடுகளை ஆதரிக்க மாட்டோம்' என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், "வீ தி லீடர்ஸ்' என்ற பெயரிலான இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதில் பாஜகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அண்ணாமலையுடன் கைகோத்துச் செயல்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் இணைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அண்ணாமலையின் கட்சி விலகல் அறிவிப்புக்குப் பிந்தைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபினிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "அண்ணாமலை போன்ற பல இளைஞர்கள் தேசப் பணியில் ஈடுபட கட்சி அவர்களை எல்லா வழிகளிலும் ஊக்குவித்து ஆதரவாக இருந்தது. தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதே மக்கள் சேவை. எங்களுடன் பயணித்த காலம் வரை அண்ணாமலையின் கருத்துகளுக்கும், யோசனைகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இப்போது அண்ணாமலை பாஜகவில் இல்லை. சில காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகுவதாகக் கூறி அதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார். பாஜகவில் உறுப்பினராக இல்லாததால் அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்துகளையும், செயல்பாடுகளையும் நாங்களும் ஆதரிக்கப்போவதில்லை.
பாஜகவை பொருத்தவரையில், கட்சியே பிரதானம், அதன் சித்தாந்தங்களும் கொள்கைகளுமே பெரியவை. தனி மனிதர்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுபவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். எனவே, கட்சியில் இருந்து விலகிச் சென்றவரைப் பற்றி பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை' என்றார் நிதின் நபின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்க்கு மாற்றா? அண்ணாமலை மாநாடும் அரசியல் பாதையும்!
உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முடிவு- தெலங்கானாவில் பாஜக தலைவா் உறுதி
நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



