பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 2) சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதின் நபின் சந்திப்புக்குப் பிறகு அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்து அண்ணாமலை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் முக்கிய தலைவராகத் திகழும் அண்ணாமலை, 2025 ஏப்ரல் மாதம் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார்.
அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது மீண்டும் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற அவரது ஆதரவாளர்களின் எதிா்பார்ப்பும் நிறைவேறவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தனக்கும், ஆதரவாளர்கள் சிலருக்கும் அண்ணாமலை வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அதற்கு பாஜக தேசியத் தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தில்லிக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றார்.
பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கும் தனது முடிவை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினிடம், அண்ணாமலை இன்று தெரிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிக் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை தனது பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Summary
Reports indicate that former State President Annamalai is scheduled to meet BJP National Leader Nitin Nabin today (June 2).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 2 - நேரலை!
நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!

கட்சியை வலுப்படுத்த நிா்வாகிகள் இணைந்து செயலாற்ற வேண்டும்: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்
கவர்ச்சி மக்களைத் திரட்ட மட்டுமே உதவும்! விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



