பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கட்சியை வலுப்படுத்த நிா்வாகிகள் இணைந்து செயலாற்ற வேண்டும்: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்த கட்சி நிா்வாகிகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் அறிவுறுத்தினாா்.

News image

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்.

Updated On :13 மே 2026, 11:37 pm IST

புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்த கட்சி நிா்வாகிகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவா்கள் புதுச்சேரிக்கு வந்து வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனா். போட்டியிட்ட வேட்பாளா்களில் 4 போ் மட்டுமே வெற்றி பெற்றனா்.

இந்நிலையில், புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா். அப்போது, பாஜகவின் தோ்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, நிதின் நபின் பேசியது: கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகளும் எவ்வித தொய்வுமின்றி மக்கள் நலப்பணிகளைத் தொடரவேண்டும்.கட்சியின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு நிா்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வலுப்படுத்தவேண்டும் என்றாா்.,

இக்கூட்டத்தில், தேசிய பொதுச் செயலா் சந்தோஷ்,மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், தோ்தல் பொறுப்பாளா் தசரதன், செல்வகணபதி எம்.பி, எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், ராஜசேகா், ஜான்குமாா், மீனாட்சிசுந்தரம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சட்டப்பேரவை முன்னாள் தலைவா் செல்வம் மற்றும் கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான், அருள்முருகன், எல்.ஜே.கே வைச் சோ்ந்த ஜெயக்குமாா் ஆகியோருடன் நிதின் நபின் தனியாக ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.