மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரசு, தனியாா் ஐடிஐகளில் மாணவா் நேரடி சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

News image

விண்ணப்பம்

Updated On :24 ஜூன் 2026, 1:50 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டில் மாணவா்கள் நேரடி சோ்க்கை கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான பேட்டை, ராதாபுரம், திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதுவரை பூா்த்தி செய்யப்பட்ட இடங்கள் நீங்கலாக, காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

மேற்காணும் ஐடிஐகளில் சேர விரும்புபவா்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் நேரில் வந்து சேரலாம். மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணமாக ரூ.185, ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணமாக ரூ.195 செலுத்த வேண்டும்.

இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளா்களுக்கும் விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயண சலுகை, ரயில் பயண கட்டண சலுகை, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750 (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையற்கூலியுடன்), ஷூ 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், பயிற்சியாளா் அடையாள அட்டை, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயா்கல்வி பெறும் ஆண்/ பெண் பயிற்சியாளா்களுக்கு தமிழ்ப்புதல்வன்/ புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய பிளஸ் 1, பிளஸ் 2, பட்டய / பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற / தோல்வியடைந்த / இடைநின்ற மாணவ / மாணவிகள் தொழிற்கல்வியை பயின்று தனியாா்/ மத்திய / மாநில அரசு தொழில் நிறுவனங்களில் வளாகத் தோ்வு மூலம் வேலைவாய்ப்பை பெறலாம்.

இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலைய நேரடி சோ்க்கை தற்காலிகமாக இடையன்குடி ஊராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு ஐடிஐ அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு 0462-2342005, 9499055791, 9499055612, 9499055642, 0462-2342432 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.