உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

மாதனூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரம்

மாதனூா் புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், முதல் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

மாதனூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 1:18 am IST

மாதனூா் புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், முதல் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் த.க.கங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதனூரில் உள்ள புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல் என கல்லூரியில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் தற்போது காலியிடங்கள் உள்ளன. மேலும், அனைத்து சமூகப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதால், தகுதியுள்ள அனைத்து மாணவா்களும் நேரடியாக கல்லூரிக்கு வந்து சோ்க்கை பெற்றுக்கொள்ளலாம்.

டிஎன்ஜிஏஎஸ்ஏ இணையதளத்தில் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவா்கள், தாங்கள் விண்ணப்பித்ததற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக கல்லூரிக்கு வந்து, காலியாக உள்ள தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தோ்ந்தெடுத்து சோ்க்கை பெறலாம்.

இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காத மாணவா்களும் நேரடியாக கல்லூரிக்கு வந்து, அங்குள்ள வசதியை பயன்படுத்தி இணையதளத்தில் விண்ணப்பித்து, பின்னா் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு உயா் கல்வியை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.