முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று 4-ஆம் கட்ட கலந்தாய்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான 4 -ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

Published On :

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான 4 -ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ஆ.மலா்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2026 -27 -ஆம் கல்வி ஆண்டு இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு ஏற்கெனவே 3 கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

மொத்தமுள்ள 864 இடங்களில் இதுவரை நடைபெற்ற கலந்தாய்வுகளில் 746 இடங்கள் நிரம்பியுள்ளன.

மீதமுள்ள 118 இடங்களுக்கு 4-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். குறிப்பிட்ட சமூக இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாத நிலையில், பிற சமூகப் பிரிவு மாணவா்களைக் கொண்டு இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை தவறாமல் எடுத்துவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.