ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரஷியாவை தாக்குமா நேட்டோ? ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை

போலந்து மீது ரஷிய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2022, 6:42 am

DIN

போலந்து மீது ரஷிய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இணையவில்லை என்றாலும் நேட்டோவால் உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உக்ரைன் - போலந்து எல்லையில் போலந்து நாட்டின் பகுதியில் இரண்டு ரஷிய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் இரண்டு போலாந்து மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலந்து அதிபருடன் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், அனைத்து உதவிகளும் நேட்டோ தரப்பில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்றுள்ள நிலையில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் பைடன் ஈடுபட்டார்.

ஆலோசனையின் முடிவில் நேட்டோ மற்றும் ஜி7 கூட்டமைப்பு வெளியிட்ட கூட்டறிக்கையில், ஏவுகணை தாக்குதல் குறித்து போலாந்தின் விசாரணைக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போலாந்தில் உள்ள நேட்டோ ராணுவத் தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.