பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 வயதுடைய பெண் 78 வயதுடைய முதியவரைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாக மணப்பெண் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் வசித்து வருபவர் ரஷித் மங்காகோப். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய ரஷித் மங்காகோப்பின் மருமகன் பென் மங்காகோப், இது உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல, காதல் திருமணம். இருவரும் காதலித்ததால் தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டப்படி, 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் அனுமதி இருந்தால், திருமணம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தண்ணீர் குழாய் உடைப்பால் குழியில் சிக்கிய லாரி! | CBE

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்க் கப்பல்களுக்கு பாக். கடற்படை பாதுகாப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இணைந்த பிளெஸ்ஸிங் முஸராபானி!

கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு! கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டி!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

