நாசாவின் ‘டார்ட்’ வெற்றி: இனி விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை!

கடந்த மாதம் விண்கல் மீது செயற்கைகோளை மோத வைத்து சோதனை நடத்திய ‘டார்ட்’ திட்டம் வெற்றி பெற்றதாக நாசா அறிவித்துள்ளது.
நாசாவின் ‘டார்ட்’ வெற்றி: இனி விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை!
Updated on
1 min read

கடந்த மாதம் விண்கல் மீது செயற்கைகோளை மோத வைத்து சோதனை நடத்திய ‘டார்ட்’ திட்டம் வெற்றி பெற்றதாக நாசா அறிவித்துள்ளது.

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்களால் அன்றைய டைனோசர் இனம் அழிந்து, மலைகள் வெடித்து சிதறியதுடன், சுனாமி போன்ற பேரழிவுகளை பூமி சந்தித்தது.

தற்போது பூமிக்கு உடனடியாக எந்த விண்கல்லினாலும் ஆபத்து இல்லை என்றாலும், எதிா்காலத்தில் அத்தகைய அபாயம் ஏற்படும் நிலையில், அந்தக் கற்களிலிருந்து பூமியைக் காப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அத்தகைய முயற்சியை சோதனை முறையில் நாசா மேற்கொண்டது.

அதற்காக, விண்கல் ஒன்றின் மீது வேண்டுமென்றே மோதி அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதற்காக ‘டார்ட்’ என்ற செயற்கைக்கோள் ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் கடந்த 2021 நவம்பர் மாதம் விண்ணில் ஏவயது நாசா.

இந்த ‘டார்ட்’ செயற்கைகோளானது பூமியிலிருந்து சுமார் 63 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ள 2,500 அடி விட்டம் கொண்ட ‘டிடிமாஸ்’ என்ற விண்கல்லைச் சுற்றி வரும் ‘டிமாா்ஃபாஸ்’ என்ற குட்டி நிலவு விண்கல்லைக் குறிவைத்து செலுத்தப்பட்டது.

டிமாா்ஃபாஸ்(படம்: நாசா)
டிமாா்ஃபாஸ்(படம்: நாசா)

நாசாவின் திட்டத்தின்படி, ராக்கெட்டிலிருந்து பிரிந்த ‘டார்ட்’ செயற்கைகோள் சரியான பாதையில் பயணம் செய்து டிமாா்ஃபாஸ் விண்கல்லின் மையப்பகுதியை செப். 27 அன்று துல்லியமாக தாக்கியது.

இந்நிலையில், 15 நாள்களுக்கு பிறகு செயற்கைகோள் தாக்கிய டிமாா்ஃபாஸ் விண்கல் தனது பாதையை மாற்றியுள்ளதால், நாசாவின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் டார்ட் விண்கலம் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கல்லை விண்ணிலேயே துல்லியமாக தாக்கி அதன் பாதையை மாற்ற முடியும். விண்கல்லால் இனி பூமிக்கு ஆபத்தில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com