
உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு, 400 மில்லியன் டாலரை மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி வழங்குவதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை(அக்.14) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
முகமது பின் சல்மான் பேசுகையில், உக்ரைன் - ரஷியா இடையே சண்டை முடிவுக்கு கொண்டுவர சவூதி அரேபிய அரசு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்ய முயற்சிகளை தொடர தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.