கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நைஜீரியா: மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 600க்கும் மேற்பட்டோர் 600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 11:11 am

DIN

நைஜீரியா: நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 600க்கும் மேற்பட்டோர் 600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து நைஜீரிய மனிதாபிமான விவகார அமைச்சர் சதியா உமர் ஃபாரூக் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பக்க பதிவில், நைஜீரியாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மிக மோசமான வெள்ளம் காரணமாக சுமார் 82,000 வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிந்துள்ளன. 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளது. 

மேலும், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். 

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான இடங்களுக்கு வெளியேற்றி, அவர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் மற்றும் நிவாரணப் பொருள்கள், இளநீர் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு தெரிவித்துள்ளார். 

இந்த மாத தொடக்கத்தில், நைஜீரியாவின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் நைஜர் மற்றும் பெனு நதிகளின் பாதைகளில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு பேரழிவு வெள்ளம் குறித்து எச்சரித்தது, நைஜீரியாவின் மூன்று நிரம்பிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நைஜீரியாவின் பல பகுதிகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அதே வேளையில், சில பகுதிகளில் வெள்ளம் கடந்த 2012 இல் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தை விட தற்போதைய வெள்ளம் மிகவும் மோசமானதசாக உள்ளது, கோகியில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அதிகாரி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.