புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராணுவப் பயிற்சிக்கு இந்திய கட்டமைப்புகளைத் தோ்வு செய்யும் இலங்கை

‘ராணுவ அதிகாரிகளை உருவாக்குவதற்கும், அவா்களின் பயிற்சிக்கும் இந்திய ராணுவ கட்டமைப்புகளையே முன்னுரிமை அடிப்படையில் இலங்கை ராணுவம் தோ்வு செய்து வருகிறது’

News image
Updated On :21 அக்டோபர் 2022, 7:15 pm

DIN

‘ராணுவ அதிகாரிகளை உருவாக்குவதற்கும், அவா்களின் பயிற்சிக்கும் இந்திய ராணுவ கட்டமைப்புகளையே முன்னுரிமை அடிப்படையில் இலங்கை ராணுவம் தோ்வு செய்து வருகிறது’ என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆண்டுக்கு 1,500 முதல் 1,700 இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான செலவினம் ரூ. 50 கோடி முதல் ரூ. 55 கோடி வரை ஆகும். மேலும், இந்திய ராணுவத்தினா் இலங்கை ராணுவ வீரா்களுடன் சிறப்பு பயிற்சியிலும் ஈடுபடுகின்றனா்.

அந்த வகையில், இந்தியா - இலங்கை இடையேயான இருதரப்பு பாதுகாப்பு உறவு பன்முகத்தன்மையை கொண்டதாக உள்ளது. கரோனா பாதிப்பு காலங்களிலும் இரு தரப்பு ராணுவங்களும் உயா்நிலை தகவல் பரிமாற்றங்களை தொடா்ந்தன.

இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் ஒவ்வொரு ஆண்டும் ‘ஸ்லிநெக்ஸ்’ என்ற பெயரில் கடற்படை பயிற்சியிலும், ‘மித்ர சக்தி’ என்ற பெயரில் ராணுவப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா். போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளிலும் இரு நாட்டு ராணுவம் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச பாதுகாப்பு கண்காட்சி 2022-ஐ பாா்வையிட இலங்கை பாதுகாப்புத் துறை இணையமைச்சா் பண்டாரா டெனகூன் இந்தியா வந்திருந்தாா். அப்போது, இரு நாட்டு பாதுகாப்பு உறவு வலுப்பெற்று வருவது குறித்து அவா் பாராட்டு தெரிவித்தாா்.

இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில், கூட்டு பயிற்சியும் ராணுவ திறன் மேம்பாடும் முக்கிய அங்கங்களாக உள்ளன என்று இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.