சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வை, கை செயலிழப்பு:  மருத்துவர்கள் அறிவிப்பு!

இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு கண் முழுவதும் பார்வை இழந்துள்ளதாகவும், ஒரு கை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வை, கை செயலிழப்பு:  மருத்துவர்கள் அறிவிப்பு!

நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில் கத்துக்குத்து தாக்குதலுக்கு ஆளான இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு கண் முழுவதும் பார்வை இழந்துள்ளதாகவும், ஒரு கை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆக. 12-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில்  இந்தி வம்சாவளி எழுத்தாளா் சல்மான் ருஷ்டி, பங்கேற்றபோது, மேடையில் ஹாடி மாடா் (24) என்பவா் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினாா். இதில் நெஞ்சு, கழுத்து மற்றும் கண் என அவரது உடலில்  15க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயமடைந்த ருஷ்டி, வடகிழக்கு பெனின்சுலேவியால் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ஒரு கண்ணில் பாா்வையிழக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளான சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை முழுவதும் இழந்துள்ளதாகவும், ஒரு கை செயலிழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

சல்மான் ருஷ்டியின் கல்லீரலும் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சட்டானிக் வொ்சஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, ருஷ்டிக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா். இப்புத்தகத்தை இந்தியா தடை செய்ததைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளும் தடை விதித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com