
பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனக் இன்று பொறுப்பேற்றார்.
பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3-ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார். மன்னரின் அழைப்பை ஏற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரிஷி சுனக் இன்று வருகை தந்தார்.
இதையும் படிக்க | உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்: லிஸ் டிரஸ்
மன்னர் 3ஆம் சார்லஸை சந்தித்த ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமரான வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.