உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்: லிஸ் டிரஸ்

உக்ரைனின் துணிச்சலான போராட்டத்திற்கு பிரிட்டன் ஆதரவளிக்க வேண்டும் என்று லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்: லிஸ் டிரஸ்

உக்ரைனின் துணிச்சலான போராட்டத்திற்கு பிரிட்டன் ஆதரவளிக்க வேண்டும் என்று லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் மாளிகையைவிட்டு இன்று வெளியேறிய லிஸ் டிரஸ் மக்களுக்கு ஆற்றிய உரையில்,

“நமது நாடு தொடர்ந்து சவால்களுக்கு இடையே போராடி வருகின்றது. நான் பிரிட்டனையும், பிரிட்டன் மக்களையும் நம்புகிறேன். பிரகாசமான நாள்கள் வரப் போவதை நான் அறிவேன்.

புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். உக்ரைன் கண்டிப்பாக மேலோங்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். இதை சாதிக்கதான் நான் பாடுபட்டு வருகிறேன். நம் நாட்டின் நன்மைக்காக எல்லா வெற்றிகளையும் பெற ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com