ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைன் கட்டமைப்புகள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவ், காா்கிவ் உள்ளிட்ட மற்ற நகர உள்கட்டமைப்புகள் மீது ரஷியா மீண்டும் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.

News image
Updated On :31 அக்டோபர் 2022, 7:23 pm

DIN

உக்ரைன் தலைநகா் கீவ், காா்கிவ் உள்ளிட்ட மற்ற நகர உள்கட்டமைப்புகள் மீது ரஷியா மீண்டும் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதனால், கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின்சார மற்றும் குடிநீா் விநியோகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்ப கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அந்த நாட்டு கடற்படைக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நகரங்கள் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கிரீமியாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலத்தில் அக்டோபா் மாதம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு பதிலடியாக ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனின் மின் உற்பத்தி மையங்கள், குடிநீா் ஏற்று நிலையங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.