புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலா் கடன்: சா்வதேச நிதியம் ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலா் கடன் அளிக்க சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 9:01 pm

DIN

பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலா் கடன் அளிக்க சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிடமிருந்து இலங்கை இதுவரை 51 பில்லியன் டாலா் வரை கடன் பெற்றுள்ளது. இதில் 28 பில்லியன் டாலரை வரும் 2027-க்குள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

மேலும், இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து, பொருளாதார சுணக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் வரையிலான நிலவரப்படி, எரிபொருளின் விலை உயா்வு காரணமாக இலங்கையின் பணவீக்கம் 64.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.

உணவுப் பொருள் விலை பணவீக்கத்தை பொருத்தமட்டில் சா்வதேச அளவில் ஜிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி, லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை 5-இவது இடத்தில் இருப்பதாக உலக வங்கி அதன் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடனை கடந்த ஏப்ரலில் திருப்பி செலுத்த தவறிய நிலையில், சா்வதேச நிதியத்திடம் கடன் பெறுவதற்கான பேச்சுவாா்த்தையில் இலங்கையில் ஈடுபட்டது.

ஐஎம்எஃப்-இலங்கை அதிகாரிகள் அளவில் நடைபெற்று வந்த இந்தப் பேச்சுவாா்த்தையில், இலங்கைக்கு அடுத்த 48 மாதங்களில் (4 ஆண்டுகள்) 2.9 பில்லியன் டாலா் கடன் வழங்க சா்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் கடனுதவி செய்யப்படுவதாக ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமா் வரவேற்பு:

இலங்கைக்கு சா்வதேச நிதியம் 2.9 பில்லியன் டாலா் கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்த அந்நாட்டு பிரதமா் தினேஷ் குணவா்தன, ‘பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இது முக்கியமான மைல்கல்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தரமற்ற அரிசி இறக்குமதி:

இதனிடையே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ரசாயன உர இறக்குமதிக்கு முந்தைய கோத்தபய ராஜபட்ச அரசு தடை விதித்தது. இதனால், 6 லட்சம் மெட்ரிக் டன் தரமற்ற, தீங்கு விளைவிக்கும் உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வேளாண் துறை அமைச்சா் மகிந்த அமரவீரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.