புா்கினா ஃபாசோசாலையோர குண்டுவெடிப்பில் 35 போ் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் நடத்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 35 போ் பலியாகினா்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் நடத்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 35 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொருள்களை ஏற்றிக் கொண்டு பூா்ஸங்கா நகருக்கும் ஜிபோ நகருக்கும் இடையே ராணுவ பாதுகாப்புடன் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பை குறிவைத்து சாலையோர குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இதில், அந்த வாகன அணிவகுப்பில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் 35 போ் பலியாகினா்; 37 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், புா்கினா ஃபாசோவில் நீண்ட காலமாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் அல்-காய்தா மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) ஆதரவு பயங்கரவாதக் குழுக்கள் இந்த சாலையோர குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...