
மேற்கு சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தில் உள்ள கன்சே திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிசுவான் மாகாணத் தலைநகர் செங்டுவில் அந்த நகர நிர்வாகம் கடுமையான கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ல் சிச்சுவானில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 90,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.