ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி... 5 கி.மீ. வரிசையில் மக்கள்

ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி... 5 கி.மீ. வரிசையில் மக்கள்

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 5 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
Published on

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 5 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டிய பீரங்கி வண்டியில் அவரது உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மன்னா் சாா்லஸ் மற்றும் அவா்களது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி உள்ளிட்டோா் இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 5 கிலோமீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், அங்கு 4 நாள்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு செப்.19 ஆம் தேதி ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com