புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான்

இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக இன்று திறக்கப்பட்டன.
புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான்
புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான்

அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ட்ரூப் ஜோங்கா் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக இன்று திறக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்காக, பூடானில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் பூடான் அறிவித்திருந்தது. இந்த நிதி மூலம், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சுற்றலா பயணிகளை அதிகளவில் ஈர்க்க வழிவகை செய்யவும் பூடான் அரசு திட்டமிட்டுள்ளது.

பூடானின் உள்துறை மற்றும் கலாசாரத் துறையின் இயக்குநா் தாஷி பென்ஜோா், அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் அதிகாரிகளை கடந்த வாரம் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின் போது அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், வா்த்தகம், அதிகாரிகளுக்கு இடையிலான போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் 23-ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நேரடித் தொடா்பு அவசியம். முன்பு, ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ ஆகிய இரு வாயில்கள் வழியே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று புதிய வாயில்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘நிலைத்த மேம்பாட்டுக்கான நிதி’ என்னும் கட்டணம் வசூலிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com