
மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஷின்ஸோ அபே கடந்த ஜூலை 8-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது படுகொலை செய்யப்பட்டாா். அவரது இறுதிச் சடங்கு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்று வருகிறது.
ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமா் மோடி உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்களும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இறுதி சடங்கைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசவுள்ளாா். இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமையும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஷின்ஸோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜுலை 9-ஆம் தேதி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.