பதவி விலகலா?: இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச பதவி விலகவில்லை என்று இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
பதவி விலகலா?: இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்!


பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச பதவி விலகவில்லை என்று இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. பதவியிலிருந்து விலகுவதாக பரவி வரும் தகவலும் உண்மையில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடித்து வருவதால், அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.  அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி.) வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசை அமைப்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 11 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். 

இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட கருத்துக்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபட்சவும் பிரதமர் மகிந்த ராஜபட்சவும் ஒப்புதல் தெரிவித்தனர். 

இதனால், பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலக உள்ளதாகவும், கூட்டத்தில் புதிய பிரதமர் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அவை முற்றிலும் தவறானது என்று இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பரவுகின்ற தகவல் தவறானது. பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் முடக்கிவைக்கப்பட்டிருந்த சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த தகவல்களை இலங்கை செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com