காபந்து பிரதமராக குல்சார் அகமது: இம்ரான் கான் பரிந்துரை

​பாகிஸ்தான் காபந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை பிரதமர் இம்ரான் கான் திங்கள்கிழமை பரிந்துரைத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தான் காபந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை பிரதமர் இம்ரான் கான் திங்கள்கிழமை பரிந்துரைத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த துணை சபாநாயகர் ஞாயிற்றுக்கிழமை அனுமதி மறுத்தார். இதையடுத்து, பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிஃப் அல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இதைத் தொடர்ந்து, காபந்து பிரதமர் பொறுப்புக்குத் தகுந்த பெயர்களைப் பரிந்துரைக்குமாறு பிரதமர் இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃபுக்கு அதிபர் ஆரிஃப் அல்வி இன்று (திங்கள்கிழமை) கடிதம் எழுதியிருந்தார்.  

இந்த நிலையில், காபந்து பிரதமர் பொறுப்புக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் சௌதரி தெரிவித்தார். மேலும், பிடிஐ கட்சியினுடைய மையக் குழுவின் ஒப்புதலோடே இம்ரான் கான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com