பிரிட்டனின் 'சேனல் 4' விற்பனைக்கா?: மக்கள் எதிர்ப்பு

அரசுத் தொலைக்காட்சியை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசு முடிவை எதிர்க்கட்சி, தொலைக்காட்சி  நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலதரப்பினரும்  விமர்சித்து வருகின்றனர். 
பிரிட்டனின் 'சேனல் 4' விற்பனைக்கா?: மக்கள் எதிர்ப்பு

அரசு தொலைக்காட்சியான சேனல் 4-ஐ விற்பனை செய்ய பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. அரசுத் தொலைக்காட்சியை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசு முடிவை எதிர்க்கட்சி, தொலைக்காட்சி  நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். 

சேனல் 4 ஐ தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் தற்கால ஊடக மாற்றங்களுக்கு ஏற்ப ஒளிபரப்பு சேவை மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

லண்டனிலுள்ள சேனல் 4 அலுவலகம்
லண்டனிலுள்ள சேனல் 4 அலுவலகம்

இது தொடர்பாக சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ள கலாசாரத் துறை செயலர் நாடின் தொர்ரிஸ், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் அரசு நடத்திவரும் சேனல் 4 பின்னடைவைவே சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

எனினும், சேனல் 4-ஐ தனியாருக்கு விற்றால், அதில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிளாக் மிரர், டெர்ரி கேர்ள்ஸ்  போன்ற மக்கள் பாராட்டைப் பெற்ற நிகழ்ச்சிகளையும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும், ஆவணப் பட நிகழ்ச்சிகளையும் இழக்க நேரிடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

பிரிட்டனில் 1982ஆம் ஆண்டு சேனல் 4 தொடங்கப்பட்டது. அரசு சார்பில் மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி, விளம்பரங்களின் வருவாயைக் கொண்டும், மக்கள் வரியின் மூலமும் தொடர்ந்து இயங்கி வந்தது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சேனல் 4 தொலைக்காட்சியை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசு முடிவுக்கு தொலைக்காட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com