
கோப்புப்படம்
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை சைக்கிள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லட்சத்தீவுகள் மாசு கட்டுப்பாட்டு கழகத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் லட்சத்தீவுகளில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் ஒருபகுதியாக வாரந்தோறும் புதன்கிழமை நாளை அரசு ஊழியர்கள் சைக்கிள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க | கரோனா குறைந்தாலும் முககவசம் அணிய வேண்டும்: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
வாகனப் பயன்பாடுகளைக் குறைக்கவும், அதன்மூலம் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லட்சத்தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமைதோறும் அரசு ஊழியர்கள் சைக்கிள்களிலேயே அலுவலகம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள அரசு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...