இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள், வாடகை செலுத்துவதற்காக தங்கத்தை விற்பனை செய்யும் மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகவும், வீட்டு வாடகையை செலுத்துவதற்காகவும், மக்கள் தங்களுடைய தங்க ஆபரணங்களை விற்பனை 
இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள், வாடகை செலுத்துவதற்காக தங்கத்தை விற்பனை செய்யும் மக்கள்


கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகவும், வீட்டு வாடகையை செலுத்துவதற்காகவும், மக்கள் தங்களுடைய தங்க ஆபரணங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால்,  நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள், மிகவும் அத்தியாவசியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு பல சிறுதொழில்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், வீட்டு வாடகையை செலுத்துவதற்காகவும் மக்கள் தங்களிடம் உள்ள  தங்க ஆபரணங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் அன்றாட தேவைக்காக தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்வது மிகவும் பரிதாபமாக இருப்பதாக தங்க உரிமையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கொழும்பின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கொழும்பு நகைக்கடை உரிமையாளர் கூறுகையில்,  இலங்கை மக்களின் நிலைமை நிலைமை மிகவும் பரிதாபமாக இருப்பதாகவும், அன்றாட தேவைக்காக, மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்வது மிகவும் பரிதாபமாக இருப்பதாக தெரிவித்தார்.

"இலங்கையில் இதுபோன்ற நெருக்கடியை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இலங்கை நாணயம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதால் வாங்குபவர்களை விட விற்பனை செய்பவர்கள் அதிகம்" என்று நகை வியாபாரி சில்வா கூறினார். 

இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியால், இலங்கை மக்கள் அன்றாட பயன்பாடு, கடன்கள் மற்றும் பிற முக்கிய செலவுகளுக்காக தங்களின் மஞ்சள் உலோகத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தங்கக் கடை உரிமையாளரும் தயாரிப்பாளருமான மொஹ்சின் கூறினார்.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சேர்த்து, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இப்போது உலகின் மிக மோசமான செயல்திறன் கொண்டதாக உள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, தற்போது 24 காரட் தங்கத்தின் விலை இலங்கை ரூபாயின் மதிப்புக்கு 2,05,000 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை 1,55,000 ஆகவும், வரும் நாள்களில் 2 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக," நகை வியாபாரிகள் கூறுகின்றனர். 

தங்கம் விலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களுக்கு டாலர் நெருக்கடியே மட்டுமே காரணம் என்றும் கூறுபவர்கள், "அமெரிக்க டாலருக்கு நிகரான நிலையான விலை எங்களிடம் இல்லை. இலங்கை அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் தங்கத்தின் விலை வேறுபாடு உள்ளது" என்றும்  கூறுகின்றனர். 

இதற்கிடையில், சில தனியார் பணப்பரிமாற்ற நிறுவனங்கள்  ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்புக்கு 345 முதல் 380 வரை வசூலிக்கின்றனர்.

இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இலங்கையில்,  உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் பாதிப்பு மற்றும் நாட்டில் மின்வெட்டுக்கு வழிவகுத்தது. தற்போது அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடுகளால் நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com