உலகளவில் கரோனா பாதிப்பு 50.3 கோடியைக் கடந்துள்ளது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50.3 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 62.2 லட்சமாக அதிகரித்துள்ளது. 
உலகளவில் கரோனா பாதிப்பு 50.3 கோடியைக் கடந்துள்ளது

வாஷிங்டன்:  உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50.3 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 62.2 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்ததை அடுத்து கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது மக்களிடையே நிம்மதியை அளித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும், தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 2,28,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 503,856,958 -ஆக அதிகரித்துள்ளது. அதே காலயளவில் 503 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,220,423 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,30,721 போ் குணமடைந்துள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 503,856,958 -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 6,220,423 போ் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 11.16 பில்லியனாகவும் உயர்ந்துள்ளன.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 454,358,951 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 43,277,584 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 42,725 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 82,295,768    -ஆகவும் பலி எண்ணிக்‍கை 1,015,357-ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 43,040,947    -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 521,776 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 30,247,302-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 661,960 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

1 கோடிக்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள மற்ற நாடுகள் விவரம்: பிரான்ஸ் (27,762,686), ஜெர்மனி (23,339,311), இங்கிலாந்து (21,916,961), ரஷியா (17,790,211), தென் கொரியா (16,212,751), இத்தாலி (16,212,751), இத்தாலி ஸ்பெயின் (11,627,487) மற்றும் வியட்நாம் (10,394,533) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழப்பில் பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகள் உள்ள நாடுகள்: ரஷியா (365,540), மெக்சிகோ (323,891), பெரு (212,565), இங்கிலாந்து (172,014), இத்தாலி (161,465), பிரான்ஸ் (145,098), ஈரான் (140,777), கொலம்பியா (139,741), ஜெர்மனி (132,900), அர்ஜென்டினா (128,327), போலந்து (115,809), ஸ்பெயின் (103,104) மற்றும் தென் ஆப்பிரிக்கா (100,142) பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com